படிவங்கள் மற்றும் விண்ணப்பங்கள்


பிரிவின் பணிகள் சில

  • வலயப் பாடசாலைகளில் ஆசிரியர் பயன்பாடு, வலயங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றத்தின் போது மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு சிபாரிசுகளை முன்வைத்தல்.

  • அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பணிக்குழுவினரின் தனிப்பட்ட கோவைகளை பேணுதல். முற்பணம், கடன், அக்ரஹார காப்புறுதி என்பனவற்றுக்கான சிபாரிசு/ அனுமதியைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகள், கல்வி வலயத்தினுள் பணியாற்றும் சகல கல்வி சாரா ஊழியர்களினதும் இடமாற்றம், வலயத்திலிருந்து விடுவித்தல் தொடர்பான நடவடிக்கைகள்.

  • பாடசாலைகள், கோட்ட, வலயக் கல்விப் பணிமனைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கு தொலைபேசி வசதிகளை வழங்கலும் பாராமரித்தலும். அரச உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் மற்றும் வாகனங்களின் நிருவாகம் தொடர்பான செயற்பாடுகள்.

  • ஆசிரியர் இடமாற்ற சபையைக் கூட்டுதல், கூட்டம் நடத்துதல், சிபாரிசுகளை செய்தல். அதிபர் சேவையின் சகல உத்தியோகத்தர்களினதும். இடமாற்றம் தொடர்பான சிபாரிசுகளை முன்வைத்தல்.

  • சம்பள ஏற்றம், வெளிநாட்டு விடுமுறை, சேவை நீடிப்பு, ஓய்வூதியக் கோவை, கடன் அனுமதித்தல், பதவி உயர்வுக்கான சிபாரிசு, கடமை லீவு, பிரசவ லீவு, மற்றும் விசேட சுகயீன லீவு அனுமதித்தல் மற்றும் வருடாந்த சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்தல்,சேவையில் நிரந்தரமாக்கல், இடமாற்றம் செய்தல் ஒழுக்காற்று நடவடிக்கைகள்.

  • சில்லறைக் காசு கட்டுநிதி முகாமைத்துவம். அன்றாட தபால் தொடர்பான செயற்பாடுகள். ஆவணக் காப்பகக் கட்டுப்பாடு தொடர்பான செயற்பாடுகள். தேவைக்கேற்ப வலயக் கல்விப் பணிப்பாளரினால் ஒப்படைக்கப்படும் வேறும் பணிகள்.

  • வலயக் கல்விப் பணிமனை மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் பணிக்குழுவினரது கடமைப் பட்டியலைத் தயாரித்தலும் கண்காணித்தலும்.

  • உள்ளக ஒழுக்காற்றுச் செயற்பாடுகளும் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ளலும்., ஒழுக்காற்று விசாரணைகளுக்கு வசதியளித்தல், பணிக்குழுவினரின் பயிற்சி வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்தலும் நடைமுறைப்படுத்துதலும்.,

  • அலுவலக பௌதீக வளங்களின் பராமரிப்பும் அபிவிருத்தியும். வரவேற்பு கருமபீடம், உள்ளக தொடர்பாடல் மற்றும் நிறுவன உற்பத்தித்திறன் எண்ணக்கருவினை அமுலாக்கல் தொடர்பான செயற்பாடுகள். நிறுவன மற்றும் நிருவாக பிரிவு செயற்பாடுகளை உள்ளக மேற்பார்வைக்கு உட்படுத்தல்.