​பொங்கல் விழா - 2025

News Date : 2025-02-07

திருக்கோயில் வலயக் கல்வி அலுவலகத்தின் தைப்பொங்கல் விழா - 2025 வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. இரா. உதயகுமார் அவர்களின் தலைமையில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. த. கஜேந்திரன் அவர்களும், பொத்துவில் பிரதேச செயலாளர் ஜனாப். M.A.C. அஹமட் நஸீல் அவர்களும் கலந்துகொண்டதுடன், ஆன்மீக அதிதி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் பொங்கல் வைக்கப்பட்டு விசேட பூசையும் இடம்பெற்றது. விசேட உரைகள், மாணவர்களும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கவியரங்கு என்பன பொங்கல் நிகழ்வில் சிறப்பம்சமாக இடம்பெற்றன.

Image Image Image Image Image Image Image Image Image Image Image Image Image Image Image Image Image Image Image Image

இலங்கை சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு

News Date : 2025-02-04

இலங்கை சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வானது வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.இரா.உதயகுமார் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் (தாபனம் மற்றும் பொது முகாமைத்துவம்) அவர்களின் தலைமையில் இன்று எமது அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டு நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Image Image Image Image Image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து

News Date : 2025-01-27

இம்முறை வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் பாடசாலைகளுக்கு நேரடியாக விஐயம் செய்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Image Image Image Image Image Image Image Image Image Image Image Image Image Image

2025ம் ஆண்டிற்கான கடமை நடவடிக்கைகளை ஆரம்பித்தல்

News Date : 2025-01-01

"Clean Sri Lanka" தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 2025 ம் ஆண்டின் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று2025.01.01 காலை 8.30 மணிக்கு திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில், வலயக்கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது…. இந் நிகழ்வில் தேசிய கொடி , வலயக்கொடி ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி), பிரதிக் கல்விப் பணிப்பாளர் (தாபனம் மற்றும் பொது முகாமைத்துவம் ) பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்), பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி நிருவாகம்), பிரதிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக்கல்வி மற்றும் மாணவர் நலன்புரி), கணக்காளர் , நிர்வாக உத்தியோகத்தர் , கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள் , கல்விசாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Image Image Image Image Image Image Image

ஆசிரியர்களுக்கான தரவட்டக் கூட்டம்

News Date : 2024-03-21

இன்று திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் க.பொ.த.சா.தரத்திற்கு தமிழ், தமிழ் இலக்கிய நயம் நடனம், சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் ஆகிய 6 பாடங்களையும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தரவட்டக் கூட்டம் நடைபெற்றது.

Image Image Image Image

புத்தாண்டு 2024 ஆரம்ப நிகழ்வு மற்றும் சத்தியப்பிரமாணம்

News Date : 2024-01-01

பிறந்திருக்கும் 2024ம் ஆண்டுக்கான அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வும் அரச ஊழியர்களின் சத்தியப்பிரமாணமும் இன்று காலை 8.30 மணிக்கு திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. காலை 8.30 மணிக்கு தேசியக்கொடி மற்றும் வலயக்கொடி என்பன ஏற்றப்பட்டு சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து சுவாமி நித்தியானந்தா அவர்களின் இறை ஆசியுரையுடன் இவ்வாண்டிற்கான அலுவலகப் பணிகள் வலயக்கல்வி உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

Image Image Image Image Image